வத்தலகுண்டு நகரில் உள்ள குடோனில் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் பாமாயில் பாக்கெட்டுகள். 
Regional01

வத்தலகுண்டு தனியார் குடோனில் ரேஷன் பாமாயில் பாக்கெட்டுகள் பறிமுதல் :

செய்திப்பிரிவு

வத்தலகுண்டு கண்ணார் தெருவில் உள்ள தனியார் குடோனில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பாமாயில் எண்ணெய் பாக்கெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீஸார் அந்த குடோனில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அங்கு மூட்டை மூட்டையாக எண்ணெய் பாக்கெட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியந்தது. வத்தலகுண்டு பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த நாகூர் (40) என்பவருக்கு சொந்தமான அந்த குடோனில் பாமாயில் எண்ணையைப் பதுக்கி வேறு கம்பெனி டின்னில் அடைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. ரேஷன் பருப்பு 50 கிலோ, 5320 லிட்டர் பாமாயில் பாக்கெட்டுகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT