Regional02

கரூரில் மனநல சீராய்வுக் குழுமக் கூட்டம் :

செய்திப்பிரிவு

கரூரில் மனநல சீராய்வுக் குழுமக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

கரூர் மாவட்ட மனநல சீராய்வுக் குழுமக் கூட்டம் குழுமத் தலைவரும், ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதியுமான பாலசுந்தரகுமார் தலைமையில் அரசு மருத்துவமனையில் நேற்று நடைபெற்றது. மனநல சீராய்வு குழுமத்தின் அதிகாரங்கள் மற்றும் பணிகள் குறித்து பாலசுந்தரகுமார், மன நோயாளிகளின் உரிமைகள், பாதுகாப்புகள் குறித்து மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலரும், சார்பு நீதிபதியுமான சி.மோகன்ராம் ஆகியோர் விளக்கினர்.

கரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா, மனநல மருத்துவர் ரமேஷ்பூபதி, முத்துச்சாமி, செல்வராஜ், மனநல சீராய்வுக் குழும உறுப்பினர்கள, தொண்டு நிறுவன நிர்வாகிகள், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT