Regional01

ஓய்வூதியம் கிடைக்காததால் - ஓய்வுபெற்ற சத்துணவு பணியாளர் அங்கன்வாடி ஊழியர்கள் தவிப்பு :

செய்திப்பிரிவு

தமிழ்நாடு ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர் நல சங்க மாநில அமைப்பாளர் தெ. ஆறுமுகம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சிய ருக்கு அனுப்பியுள்ள மனு:

ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி திட்ட ஊழியர்கள் 60 வயதை கடந்த 80 வயதான மூத்த குடிமக்கள் ஆவர். இவர்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக சத்துணவு பணி செய்து ஓய்வு பெற்றவர்கள்.

இவர்களின் ஓய்வூதியமானது மாதாந்திர உணவு மற்றும் மருத்துவ செலவுக்கே போதாத நிலையுள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு மாதமும் மாத இறுதிநாளில் ஓய்வூதியம் கிடைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததால் சமூகநல ஆணையரகம் இதற்கு அனுமதித்து உத்தரவு பிறப்பித்திரு ந்தது. ஆனால், இந்த உத்தரவு இன்னும் பல இடங்களில் அமல் படுத்தப்படவில்லை. மார்ச் மாதத்துக்கான ஓய்வூதியம் தற்போதுவரை ஊழியர்களுக்கு கிடைக்கவில்லை. இதனால் ஓய்வுபெற்ற ஊழியர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். அரசும், ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளும் அக்கறை செலுத்தி மனிதாபிமானத்துடன் ஒவ்வொரு மாத இறுதியிலும் ஓய்வூதியம் கிடைக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT