Regional02

தூத்துக்குடி வஉசி மார்க்கெட்டை இடிக்க எதிர்ப்பு - கடைகளை அடைத்து போராட்டம் வியாபாரிகள் உண்ணாவிரதம் :

செய்திப்பிரிவு

தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வஉசி மார்க்கெட்டை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில்அமைந்துள்ள பழமையான வஉசி மார்க்கெட்டைமுழுமையாக இடித்துவிட்டு, ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் நவீன வணிகவளாகம் கட்டமாநகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு வியாபாரிகள் தொடர்ந்துகடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தமார்க்கெட்டில் சுமார் 600 கடைகள் உள்ளன. இதனை நம்பி சுமார் 50 ஆயிரம் குடும்பங்கள்உள்ளன. எனவே, மார்க்கெட்டை இடிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என வியாபாரிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், வஉசி மார்க்கெட்டில் உள்ளகடைகளை ஏப்ரல்10-ம் தேதிக்குள் காலி செய்யவேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக கூறி, மாநகராட்சி சார்பில் கடந்த இருதினங்களுக்கு முன்பு மார்க்கெட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வஉசி மார்க் கெட்டை இடிக்கக்கூடாது என வலியுறுத்தியும் வியாபாரிகள் நேற்று கடைகளை அடைத்துவிட்டு, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வஉசி மார்க்கெட் ஐக்கிய வியாபாரிகள் சங்க செயல் தலைவர் சந்தனராஜ் தலைமை வகித்தார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில துணைச் செயலாளர் விநாயக மூர்த்தி கலந்துகொண்டு பேசினார். வியாபாரிகள் சங்க துணைத் தலைவர்கள் நயினார், பட்டுராஜா, சண்முகராஜ், மாரியப்பன், செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் அன்புராஜ் உட்பட திரளானோர் கலந்துகொண்டனர்.

மார்க்கெட்டில் சுமார் 600 கடைகள் உள்ளன. இதனை நம்பி சுமார் 50 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. எனவே, மார்க்கெட்டை இடிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என வியாபாரிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT