தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனாதடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மீண்டும் தனிமை முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தினசரி கரோனா பாதிப்பு ஒன்று அல்லது இரண்டு என்ற நிலையில் தான்இருந்தது. ஆனால், தற்போது தினசரிபாதிப்பு 50-ஐ கடந்துள்ளது. எனவே, கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் நேற்று ஆலோசனை நடத்தினார்.
ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதி பாலன்,பொது சுகாதாரத்துறை இணை இயக்குநர் முருகவேல், துணை இயக்குநர்கள் போஸ்கோ ராஜா (தூத்துக்குடி), அனிதா (கோவில்பட்டி), மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி மாரியப்பன், மாநகராட்சி நகர்நல அலுவலர் வித்யா, கோவில்பட்டி நகராட்சி ஆணையர் ராஜாராமன் கலந்துகொண்டனர். கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறும், அரசுவிதித்துள்ள கட்டுப்பாடுகளை கண்டிப்புடன் அமல்படுத்துமாறும் அதிகாரிகளிடம் ஆட்சியர் அறிவுறுத்தினார்.
இதற்கிடையே, தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மீண்டும் தனிமை முகாம்கள் அமைக்கும் பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். கரோனாசிகிச்சை மையங்களை அதிகப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முகக்கவசம் அணியாதவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர்.
இதேபோல் கடைகள், வணிக நிறுவனங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சென்று கரோனா கட்டுப்பாடுகளை கண்டிப்புடன் பின்பற்ற அறிவுறுத்தி வருகின்றனர். பூங்காக்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில் கரோனா கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு பலகைகள் வைக் கப்பட்டு வருகின்றன.
தூத்துக்குடி மாவட்டத்தில் தினசரி கரோனா பாதிப்பு ஒன்று அல்லது இரண்டு என்ற நிலையில் தான் இருந்தது. ஆனால், தற்போது தினசரி பாதிப்பு 50-ஐ கடந்துள்ளது.