Regional03

தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள - கோழிப் பண்ணைகளில் இருந்து வீசப்படும் கழிவுகளால் சீர்கேடு : கிராம மக்கள், விவசாயிகள் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

தாராபுரம் அருகே பஞ்சப்பட்டி, சின்னக்காம்பாளையம் கிராமப் பகுதிகளிலுள்ள கோழிப் பண்ணைகளில் இருந்து வெளியே வீசப்படும் இறந்த கோழிகள் மற்றும் கழிவுகளால் சுகாதார சீர்கேடும், கோழிகளை உண்ண வரும் நாய்களால் மனிதர்கள் மற்றும் கால்நடைகள் தாக்குதலுக்கு உள்ளாகும் சூழலும் நிலவுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கூறும்போது, "தாராபுரம் அருகே பஞ்சப்பட்டி பகுதியில் இயங்கும் தனியார் கோழிப் பண்ணையால் சுகாதாரச் சீர்கேடு மற்றும் ஆடு, மாடு வளர்ப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இங்கு, இறக்கும்கோழிகளை உரிய முறைப்படிபுதைக்காமல், திறந்தவெளியில் ஆங்காங்கே கிராமப் பகுதியின் பல்வேறு இடங்களில் வீசிசெல்கின்றனர். கோழிப் பண்ணைகழிவுகளும் கொட்டப்படுகின்றன.இறந்தகோழிகளை உண்ணபடையெடுக்கும் நாய்கள், வீடுகள் மற்றும் தோட்டங்களில் வளர்க்கப்படும் ஆடு, மாடுகளை கடிக்கின்றன. சில நேரங்களில் மனிதர்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது. இப்பிரச்சினையால் குடியிருக்கவே இயலாத நிலையும், ஆடு, மாடுகள் வளர்க்க முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் கவனத்தில்கொண்டு உரிய நடவடிக்கைஎடுக்க வேண்டுமென எதிர்பார்க் கிறோம்" என்றனர்.

தாராபுரம் வட்டாட்சியர் ஏ.ரவிச்சந்திரன் 'இந்து தமிழ் திசை'செய்தியாளரிடம் கூறும்போது, "பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் பிரச்சினை தொடர்பாக இன்று (ஏப்.9) வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அதன் பிறகு, அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.

SCROLL FOR NEXT