சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டில் முதல்முறையாக, கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகபட்சமாக ஒரேநாளில் 103 ஆக உயர்ந்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப் பட்டவர்கள் எண்ணிக்கை நேற்று முன்தினம் 93 ஆக இருந்தது. நேற்று நடப்பாண்டில் ஒரேநாளில் அதிகபட்சமாக 103 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.இதில், சேலம் மாநகராட்சிப் பகுதியில் 52 பேரும், சேலம் சுகாதார மாவட்டத்தில் காடையாம்பட்டியில் 3 பேர், வீரபாண்டியில் 4, நங்கவள்ளியில் 5, ஓமலூரில் 6 பேர், சங்ககிரியில் 7 பேர் உள்ளிட்ட 30 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில், ஆத்தூரில் 4பேர், அயோத்தியாப்பட்டணத்தில் 3, வாழப்பாடியில் 2, கெங்கவல்லி, பனமரத்துப்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம், தலைவாசலில் தலா ஒருவர் என மொத்தம் 13 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில், சென்னையில் இருந்து வந்த 2 பேர், நாமக்கல், கோவை, தருமபுரி, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து வந்த தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.