தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தீயணைப்புத்துறை சார்பில் தீத்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, போச்சம்பள்ளியில் அரசு மருத்துவமனையில் தீயணைப்புத்துறை சார்பில் தீத்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. ஊத்தங்கரையில் தலைமை மருத்துவ அலுவலர் மாரிமுத்து, மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர். நிலைய அலுவலர் சக்திவேல் தலைமை வகித்தார். போச்சம்பள்ளியில் மருத்துவர் கந்தசாமி தலைமை வகித்தார். ஒத்திகையின் போது, திடீரென ஏற்படும் தீ விபத்துகள் குறித்தும், அதனை எவ்வாறு அணைக்க வேண்டும். தீ விபத்துகள் ஏற்படும் போது நோயாளிகளை எவ்வாறு காப்பாற்ற வேண்டும் என்பது குறித்து தீயணைப்புத்துறையினர் செயல்விளக்கம், பயிற்சி அளித்தனர்.
தருமபுரி
இதேபோல் கரோனா தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.