Regional02

அரசுப் பேருந்து சேவை தொடர்பான புகார்களை - இ-மெயில், வாட்ஸ் அப் மூலம் தெரிவிக்க வசதி :

செய்திப்பிரிவு

அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட பேருந்துகள் சேவை தொடர்பானபுகார்களை இ-மெயில் மற்றும் வாட்ஸ் அப் மூலம் பயணிகள் தெரிவிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட பேருந்துகளில் உள்ள சேவை நிறை, குறைகளை dpinstc.salemwireless@gmail.com என்ற இ-மெயில் முகவரி மூலமாகவும், 94892 03900 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் பயணிகள் தெரிவிக்கலாம் என அரசுப் பேருந்துகளில் அறிவிப்பு வில்லைகள் ஒட்டப்பட்டுள்ளன.

இதையடுத்து, அரசுப் பேருந்துகள் தொடர்பான புகார்களை இந்த வசதி மூலம் உடனுக்குடன் பயணிகள் தெரிவித்து வருகின்றனர். பயணிகளிடம் இருந்து வரும் புகார்களை அரசு போக்குவரத்துக் கழக கோட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு, குறைகள் கூறப்பட்ட பேருந்துகளில் உள்ள குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு போக்குவரத்துக் கழகத்தின் இந்த நடைமுறைக்கு பயணிகளிடம் வரவேற்பு கிடைத்துள்ளது.

SCROLL FOR NEXT