காமன்தொட்டி, கோனேரிப்பள்ளி ஊராட்சியில் செயல்படும் குவாரிகளால் பாதிப்பு ஏற்படுவதாக கிராம மக்கள் சூளகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். 
Regional03

சூளகிரி அருகே இயங்கும் - குவாரிகளால் பாதிப்பு என கிராம மக்கள் புகார் :

செய்திப்பிரிவு

சூளகிரி அருகே இயங்கும் குவாரிகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருவதாக, கிராம மக்கள் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று காமன்தொட்டி, கோனேரிப்பள்ளி ஊராட்சியைச் சேர்ந்த கிராம மக்கள் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

கோனேரிப்பள்ளி, காமன்தொட்டி ஊராட்சிகளில் கிராமங்களில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதியின்றி, கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. குவாரிகளில் இருந்து கற்கள், மணல் உள்ளிட்டவை அனு மதிக்கப்பட்ட அளவினைவிட, லாரிகளில் அதிகளவில் கொண்டு செல்லப்படுகிறது.

இதனால் கற்கள், மணல் சாலைகளில் விழுகிறது. மேலும், குவாரிகளில் வைக்கும் வெடியால் அதிர்வு ஏற்பட்டு, வீடுகளில் விரிசல் உருவாகிறது. இந்நிலையில், கடந்த 7-ம் தேதி கனரக வாகனம் செல்லும்போது, சப்படி சாலையில் உள்ள பெருமாள் கோயில் வளைவு மீது மோதியதில் சேதமடைந்துள்ளது. அதிவேகமாக செல்லும் வாகனங் களால், அடிக்கடி விபத்துகள் நிகழ்கிறது.

குவாரிகளில் இருந்து வெளியேறும் தூசுகளால் பல்வேறு பாதிப்புகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே, எங்கள் ஊராட்சியில் செயல்படும் குவாரிகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

SCROLL FOR NEXT