Regional02

ஷேர் ஆட்டோவில் 5 பேர் மட்டுமே பயணிக்க அனுமதி :

செய்திப்பிரிவு

ஷேர் ஆட்டோவில் 5 பேர் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெரியவந்துள்ளது.

திருநெல்வேலியை சேர்ந்த வழக்கறிஞர் அ. பிரம்மா தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டிருந்த கேள்விகளுக்கு திருநெல்வேலி வட்டார போக்கு வரத்து அலுவலக பொது தகவல் அலுவலர் அளித்துள்ள பதில்:

ஷேர் ஆட்டோவில் மொத்தம் 5 பேர் மட்டுமே பயணம் செய்ய வேண்டும். ஒரு கி.மீ-க்கு ரூ.1 மட்டுமே கட்டணமாக இந்த ஆட்டோக்களில் வசூல் செய்யப்பட வேண்டும். ஷேர் ஆட்டோக்களை 30 கி.மீ. மட்டுமே இயக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

திருநெல்வேலியில் 49 ஷேர் ஆட்டோக்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரி விக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT