வேலூர் மாவட்டத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலை யத்தை மேலும் 60 நாட்களுக்கு திறக்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக விவ சாயிகள் சங்க வேலூர் கிழக்கு மாவட்டத் தலைவர் ராஜா நேற்று அளித்துள்ள மனுவில், ‘‘வேலூர் மாவட்டத்தில் கீரைசாத்து கிராமத்தில் தற்போது நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. அதனை, மூடப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தொடர்ந்து இயங்க வேண்டும்
2-வது நெல் களஞ்சியம்
இதன் மூலம் போலியான வியாபாரிகள் நெல் கொள்முதல் செய்வதை தடுக்க முடியும். குறிப்பாக, ரயில் நிலையங்களுக்கு அருகே நெல் கொள்முதல் நிலை யங்கள் அமைக்க வேண்டும்’’ என மனுவில் தெரிவித்துள்ளார்.