Regional02

திருப்பூர் அரசு மருத்துவமனையில் - 190 படுக்கைகளுடன் கரோனா வார்டு தயார் :

செய்திப்பிரிவு

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 190 படுக்கை வசதிகளுடன், கரோனா வார்டு தயார் நிலையில் உள்ளது.

இதுகுறித்து திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் டீன் வள்ளி சத்தியமூர்த்தி தெரிவித்ததாவது:திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற ஏதுவாக, கரோனா வார்டு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை, மாவட்டத்தில் கரோனா பாதிப்பு வெகுவாக குறைந்திருந்தது. இதையடுத்து படுக்கைகள்குறைக்கப்பட்டன. தற்போது மீண்டும் கரோனா தொற்று அதிகரித்து வருவதால், 190 படுக்கை வசதிகளுடன் கரோனாவார்டு தயார் நிலையில் உள்ளது.இங்கு சிகிச்சைக்கு வரும்நோயாளிகளுக்கு மேல்சிகிச்சை தேவைப்பட்டால், கோவைக்கு அனுப்பி வைக்கப்படுவர். பொதுமக்கள் தேவையின்றி வெளியே நடமாடுவதை தவிர்க்க வேண்டும். முகக் கவசம்,கிருமிநாசினி பயன்பாட்டை கட்டாயம் பின்பற்றி, கரோனாவில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT