சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவராக ஏ.ஆர்.பி.பாஸ்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயபிரகாஷ் உடல் நலக்குறைவால் அண்மையில் உயிரிழந்தார். இதையடுத்து, சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் புதிய தலைவராக ஏ.ஆர்.பி.பாஸ்கரை, காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி நியமித்து அறிவித்துள்ளார்.
சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள ஏ.ஆர்.பி.பாஸ்கர், அக்கட்சியின் மாநகர் மாவட்ட பொறுப்பாளராகவும், மாநில பொதுக்குழு உறுப்பினராக பொறுப்பு வகித்துள்ளார்.