Regional01

சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக : எடப்பாடி, வீரபாண்டியில் தலா 85.64 % வாக்குப்பதிவு

செய்திப்பிரிவு

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவில் அதிகபட்சமாக எடப்பாடி மற்றும் வீரபாண்டி தொகுதிகளில் தலா 85.64 சதவீதமும், குறைந்தபட்சமாக சேலம் மேற்குத் தொகுதியில் 71.81 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. சேலம் மாவட்டத்தின் 11 தொகுதிகளில் மொத்தமுள்ள 30 லட்சத்து 15 ஆயிரத்து 469 வாக்காளர்களில், தேர்தலின் போது, 23 லட்சத்து 86 ஆயிரத்து 950 பேர் தேர்தலில் வாக்களித்தனர்.

மாவட்டத்தில் அதிகபட்சமாக முதல்வர் பழனிசாமி போட்டியிட்ட எடப்பாடி தொகுதி மற்றும் வீரபாண்டி தொகுதியில் தலா 85.64 சதவீதம் பதிவானது. மாவட்டத்தில் குறைந்தபட்சமாக சேலம் மேற்குத் தொகுதியில் 71.81 சதவீதம் வாக்குப் பதிவானது. சேலம் வடக்குத் தொகுதியில் 72.14 சதவீதம் வாக்கு பதிவானது.

சங்ககிரியில் 83.71 சதவீதமும், ஓமலூரில் 83.28 சதவீதமும், ஏற்காடு (தனி)- 83.09 சதவீதமும், ஆத்தூர் (தனி) 77.26 சதவீதமும், கெங்கவல்லி (தனி) 77.11 சதவீதமும், சேலம் தெற்கு 76 சதவீதமும், மேட்டூர் 75.01 சதவீதமும் வாக்குகள் பதிவானது.

மேலும், 11 தொகுதிகளில் திருநங்கை வாக்காளர்கள் 204 பேர் உள்ள நிலையில், 83 பேர் (40.68%) வாக்களித்துள்ளனர்.

SCROLL FOR NEXT