Regional01

புதுக்கோட்டை மவுன்ட்சீயோன் மெட்ரிக் பள்ளிக்கு விருது : மத்திய அமைச்சர் வழங்கினார்

செய்திப்பிரிவு

ஆன்லைன் கல்வியில் சிறந்த பள்ளிக்கான விருதை புதுக்கோட்டை மவுன்ட் சீயோன் மெட்ரிக் பள்ளிக்கு மத்திய அமைச்சர் அண்மையில் வழங்கினார்.

கரோனா சமயத்திலும் புதுக்கோட்டை மவுன்ட் சீயோன் மெட்ரிக் பள்ளியில் தனி செயலி உள்ளிட்ட அதிநவீன தொழில் நுட்பங்களைக் கொண்டு ஆன்லைன் வழியாக மாணவர்களுக்கு தொடர்ந்து கல்வி கற்பிக்கப்பட்டு, தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

இத்தகைய, ஆன்லைன் கல்வி அளிப்பதைப் பாராட்டி இப்பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருதை, பள்ளியின் தலைவர் ஜோனத்தன் ஜெயபரதனிடம் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே வழங்கினார்.

இதில், இந்திய தூதர் சுரேஷ் பிரபு, எம்.பிக்கள் சுனிதா துக்கல்,  சிவபிரதாப் சுக்லா, முன்னாள் எம்.பி ஜெயப்பிரதா, பள்ளிகளின் நிர்வாக ஆலோசகர் செல்வராஜ் தாசன் ஆகியோர் பங்கேற்றனர்.

இது குறித்து பள்ளியின் தலைவர் ஜோனத்தன் ஜெயபரதன் கூறியது: பள்ளியின் சாதனைகளை பாராட்டி மத்திய அமைச்சர் இந்த விருதை வழங்கியுள்ளார் என்றார். 

SCROLL FOR NEXT