Regional02

கரூர் வெங்கமேடு பகுதியில் - கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாதவர்கள் மீது வழக்கு :

செய்திப்பிரிவு

வெங்கமேடு பகுதியில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக் கைகளை பின்பற்றாத வர்கள் மீது வெங்கமேடு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. தேர்தலையொட்டி, கரூர் சட்டப்பேரவைத் தொகுதி நடமாடும் (மொபைல்) போலீஸார் வாகனத்தில் ஏப்.5-ம் தேதி இரவு ரோந்து சென்றனர். அப்போது கரூர் வெங்கமேடு என்எஸ்கே நகர் பகுதியில் இரவு 11 மணிக்கு அதே பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் ரகுபதி(42), ரஞ்சித்(40) ஆகியோர் அடையாளம் தெரியாத 20 பேருடன் நின்றுகொண்டிருந்தனர்.

பஞ்சமாதேவியை அடுத்த சந்தனகாளிபாளையம் பகுதியில் இரவு 11.30 மணியளவில் அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன், மோகன்ராஜ் ஆகியோர் அடை யாளம் தெரியாத 20 பேருடன் நின்று கொண்டிருந்தனர். வெங்கமேடு பெரியகுளத்து பாளையம் அருகே அப்பகுதி யைச் சேர்ந்த பார்த்திபன், ராஜேந்திரன், பாலகிருஷ்ணன் ஆகியோர் அடையாளம் தெரியாத 20 பேருடன் நின்று கொண்டிருந்தனர்.

இதுதொடர்பாக, கரூர் சட்டப் பேரவைத் தொகுதி நடமாடும் (மொபைல்) போலீஸார் வெங்க மேடு போலீஸில் அளித்த புகார்களின் பேரில், கரோனா பெருந்தொற்று காலத்தில் முறையான கரோனா தடுப்பு நடவடிக்கைகளை எதுவும் பின்பற்றாமல் சட்டவிரோதமாக ஒன்றுகூடியதாக, அவர்கள் மீது தனித்தனியே 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT