தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் 69.88 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக விளாத்திகுளம் தொகுதியில் 76.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும் 7,27,083 ஆண்கள், 7,60,560 பெண்கள், 139 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 14,87,782 வாக்காளர்கள் உள்ளனர்.
இவர்களில் 5,08,112 ஆண்கள், 5,31,575 பெண்கள், 41 மூன்றாம் பாலினத்தவர் என 10,39,728 பேர் வாக்களித்துள்ளனர். இது 69.88 சதவீதம்.
விளாத்திகுளம்
தூத்துக்குடி
திருச்செந்தூர்
வைகுண்டம்
ஓட்டப்பிடாரம்
கோவில்பட்டி
மாவட்டத்தில் அதிகபட்சமாக விளாத்திகுளம் தொகுதியில் 76.55 சதவீதமும், குறைந்தபட்சமாக தூத்துக்குடி தொகுதியில் 65.08 சதவீதமும் வாக்குகள் பதிவாகி யுள்ளன.