Regional02

கட்சி பணத்தை கையாடவில்லை : அமமுக வேட்பாளர் விளக்கம்

செய்திப்பிரிவு

உள்கட்சிப் பூசலால் கட்சிப் பணத்தை கையாடல் செய்துவிட்டு, நான் தலைமறைவானதாக வதந்தி பரப்பியுள்ளதாக காங்கயம் அமமுக வேட்பாளர் நேற்று தெரிவித்தார்.

காங்கயம் தொகுதியில் அமமுக- தேமுதிக கூட்டணியில், அமமுக வேட்பாளர் சி.ரமேஷ் போட்டியிட்டார். இவர், தேர்தலுக்கு முந்தைய நாள் மாயமானதாக கட்சியினர் மத்தியில் பரபரப்பு எழுந்தது. கட்சியினரும் அவரைதொடர்பு கொள்ள முடியவில்லை என்று புகார் தெரிவித்தனர். நேற்றுநடைபெற்ற தேர்தலுக்கு, வாக்குச்சாவடி முகவர்கள் நியமிக்கப்படவில்லை என கட்சியினர் தெரிவித்தனர். இந்நிலையில் காங்கயம் பாரதியார் வீதி அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் அமமுக வேட்பாளர் சி.ரமேஷ், தனது மனைவியுடன் வாக்களித்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது ‘‘உள்கட்சிப் பூசலால், பணத்தை நான் கையாடல் செய்துவிட்டதாக வதந்தி பரப்பியுள்ளனர். எனது சொந்த பணத்தை வைத்துதான் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டேன். நான் எங்கும் தலைமறைமாகவில்லை’’ என்றார்.

SCROLL FOR NEXT