பள்ளிபாளையம் அருகே கோவிந்தம்பாளையத்தில் அமைச்சர் பி.தங்கமணி வாக்களித்தார். 
Regional01

முதல்வராக பழனிசாமி மீண்டும் பொறுப்பேற்பார் : அமைச்சர் பி.தங்கமணி நம்பிக்கை

செய்திப்பிரிவு

குமாரபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் 3-வது முறையாக அதிமுக சார்பில் மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி போட்டியிடுகிறார். அவர் நேற்று காலை தனது சொந்த ஊரான பள்ளிபாளையம் அருகே கோவிந்தம்பாளையம் நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார்.

அப்போது அவர் கூறுகையில், தமிழகம் முழுவதும் முதல்வர் பழனிசாமி அலைதான் அடிக்கிறது. அதிக தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்று முதல்வராக பழனிசாமி மீண்டும் பொறுப் பேற்பார், என்றார்.

SCROLL FOR NEXT