ரஜினிகாந்த் 
Regional02

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே - வாக்குச்சாவடி அலுவலர் மாரடைப்பால் மரணம் :

செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே வாக்குச்சாவடி அலுவலர் மாரடைப்பால் மரணமடைந்தார்.

திருப்பத்தூர் தொகுதி காரையூர் வாக்குச்சாவடியில் வாக்குச்சாவடி அலுவலராக திருவேம்பத்தூரைச் சேர்ந்த ரஜினிகாந்த் (40) நியமிக்கப் பட்டிருந்தார். அங்கு அவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டது. இதுகுறித்து உயரதிகாரிகளுக்கு வாக்குச்சாவடி பணியாளர்கள் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து ரஜினிகாந்தை மாற்றிவிட்டு, மாற்று வாக்குச் சாவடி அலுவலர் நியமிக்கப்பட்டு, வாக்குப்பதிவு நடந்து வந்தது. ஆனால் அங்கேயே இருந்த ரஜினிகாந்துக்கு திடீரென நெஞ்சுவலி ஏற் பட்டது. இதையடுத்து அவரை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித் தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ரஜினிகாந்த வாராப்பூர் புதூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணி யாற்றி வந்துள்ளார். இதுகுறித்து கண்டவரயான்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

நத்தம்

நத்தம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT