Regional02

அதிமுக ஆட்சியை அகற்ற மக்கள் அதிக ஆர்வம்: ஆ.ராசா கருத்து :

செய்திப்பிரிவு

பெரம்பலூர் மாவட்டம் வேலூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா நேற்று வாக்களித்தார். பின்னர், அவர் செய்தி யாளர்களிடம் தெரிவித்ததாவது:

மோடி அரசின் அடிமை ஆட்சியாக, ஊழலைமட்டுமே செய்து வந்த பழனிசாமி தலைமையிலான ஆட்சியை அகற்றுவதற்காக மக்கள் ஆர்வத்துடன் கிளர்ந்து எழுந்திருக்கிறார்கள் என்பதை கண் கூடாக இந்த தேர்தலில் பார்க்க முடிகிறது. இந்திய மதச்சார்பின்மையை, அரசியல் அமைப்புச் சட்டத்தின் மாண்பை காப்பாற்றுவதற்காக மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துள் ளனர். திமுக முறைகேடு செய்வதாகக் கூறி சில தொகுதிகளில் தேர்தலை தள்ளிவைக்க அதிமுகவினர் முயற்சித்தனர். ஆனால், அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. தமிழகத்தில் தேர்தல் முடிந்து 28 நாட்கள் கழித்து வாக்கு எண்ணிக்கையை வைத் துள்ளதால் திமுகவுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றார்.

SCROLL FOR NEXT