Regional03

கார் கண்ணாடி உடைப்பு :

செய்திப்பிரிவு

தூத்துக்குடி அதிமுகவில் தெற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன், முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் ஆகியோர் இருகோஷ்டியாக செயல்பட்டு வருகின்றனர். தூத்துக்குடியில் போட்டியிட செல்லப்பாண்டியன் சீட் கேட்டார். ஆனால், சண்முகநாதன் தரப்பு எதிர்ப்பு தெரிவித்ததால், தூத்துக்குடி தொகுதி தமாகாவுக்கு ஒதுக்கப்பட்டது.

சண்முநாதன் தரப்பை சேர்ந்த மாவட்ட தொழில்நுட்ப அணி செயலாளர் அருண் ஜெபக்குமார் என்பவர், மில்லர்புரம் தூய மரியன்னை பள்ளி வாக்குச்சாவடிக்கு எதிரேநேற்று காலை தனது காரைநிறுத்திவிட்டு, ஆதரவாளர்கள் சிலருடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த செல்லப்பாண்டியன் தரப்பை சேர்ந்த ஐயப்பன் உள்ளிட்ட சிலருக்கும், அருண் ஜெபக்குமார் தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அது கைகலப்பாக மாறியது. அருண் ஜெபக்குமாரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. தென்பாகம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT