TNadu

திருப்பூரில் 120 பவுன், ரூ.27 லட்சம் கொள்ளை :

செய்திப்பிரிவு

திருப்பூரில் தொழிலதிபர் வீட்டில் 120 பவுன் நகை, ரூ.27 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.

திருப்பூர் - தாராபுரம் சாலை கே.செட்டிபாளையம் மும்மூர்த்தி நகரைச் சேர்ந்தவர் சபியுல்லா (53). பிரிண்டிங் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர், 2 நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் உதகைக்கு சுற்றுலா சென்றார்.

இந்நிலையில், அவரது வீட்டில் கொள்ளை நடந்துள்ளது. தகவலறிந்த வந்த சபியுல்லா, வீட்டில் 120 பவுன் நகை, ரூ.47 லட்சம் ரொக்கம் கொள்ளை போனதாக போலீஸில் புகார் செய்தார்.

இதுதொடர்பாக வீரபாண்டி போலீஸார் விசாரித்ததில், ரூ.47 லட்சத்தில் ரூ.27 லட்சம் மட்டும் கொள்ளைபோயிருப்பது தெரியவந்தது. நேற்று முன்தினம் அதிகாலை இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அரைமணி நேரத்தில் இந்த கொள்ளை சம்பவத்தை நடத்தியுள்ளனர். இதுகுறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT