பல்லடம் - கோவை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள பல்லடம் ஊராட்சி ஒன்றிய தேசிய அலுவலகம் எதிரே பறக்கும் படையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
கோவை நோக்கி சென்ற வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் வந்த சந்திரன் என்பவரிடம் ரூ.1 கோடியே 9 லட்சம் இருந்தது. விசாரணையில், கோவையில் இருந்து திருப்பூருக்கு தனியார் வங்கியின் 6 ஏடிஎம்களில் நிரப்புவதற்காக எடுத்துச் செல்வது தெரியவந்தது. இருப்பினும், உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கணேசனிடம் ஒப்படைத்தனர். அவர்கள் வருமான வரித் துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் அங்கு வந்து வருமான வரித் துறையினர், சோதனையிட்டனர். பின்னர், பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்திலுள்ள கருவூலத்தில் பணத்தை ஒப்படைத்தனர். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரிப்பதாக தெரிவித்தனர்.