தேர்தலில் அனைவரின் வாக்குப் பதிவை உறுதி செய்யும் வகையில், கரோனா தொற்றாளர்களையும் வாக்களிக்க தேர்தல் ஆணையம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் கரோனா தொற்றாளர்கள் தங்களது வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க மாலை 6 முதல் இரவு 7 மணி வரை வாக்களிக்கலாம். இதற்காக வாக்குச்சாவடியில் பணிபுரியும் தேர்தல் அலுவலர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் அனைவருக்கும் முழுக் கவச ஆடை வழங்கப்படும். இதற்கான ஆடைகள் ஒவ்வொரு மையத்திலும் வைக்கப்பட்டு, இன்று மாலை வழங்கப்படும்.
இதற்காக சுகாதாரத் துறை சார்பில் பிரத்யேக வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதேபோல, திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றாளர்கள் எத்தனை பேர் வாக்களிக்க இருக்கிறார்கள் என்ற விவரங்கள் எதுவும் தெரியவில்லை என, சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.