Regional02

கடலில் தவறி விழுந்து மீனவர் மரணம் :

செய்திப்பிரிவு

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே சடையன்முனியன்வலசையைச் சேர்ந்த முருகராஜ் மகன் தினேஷ்(18). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாலை நேரத்தில் தனியாக போயாவில் (தெர்மாக்கோலால் செய்யப்பட்ட சிறிய படகு) ஏர்வாடி கொடிமர பள்ளி அருகில் இருந்து மீன் பிடிக்கச் சென்றார்.

இரவு வரை கரை திரும்பவில்லை. மெரைன் போலீஸார் மற்றும் மீனவர்கள் தேடினர். நேற்று முன்தினம் தினேஷின் உடல் மீட்கப்பட்டது.

SCROLL FOR NEXT