Regional02

தூத்துக்குடி மாவட்டத்தில் - 307 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை :

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டத்தில் 307 வாக்குச்சாவடிகள் பதற்ற மானவை என கண்டறியப்பட்டு, கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும் மொத்தம் 2,097 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 302 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனவும், 5 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை எனவும் கண்டறியப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த வாக்குச்சாவடி களில் வாக்குப் பதிவை முழுமையாக கண்காணிக்க மத்திய அரசு பணியாளர்கள் 330 பேர் நுண் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இவை உட்பட 1,050 வாக்குச் சாவடிகளில் வெப் கேமராக்கள் பொறுத்தப் பட்டுள்ளன. இக்காட்சிகளை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோர் நேரடியாக பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT