Regional01

குற்றாலநாத சுவாமி கோயிலில் - சித்திரை விஷு திருவிழா கொடியேற்றம் :

செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் உள்ள குழல் வாய்மொழியம்மன் சமேத குற்றாலநாதர் கோயிலில் பிரசித்தி பெற்ற சித்திரை விஷு திருவிழா நேற்று தொடங்கியது. காலை 5.20 மணிக்கு மேல் கொடியேற்றமும், தொடர்ந்து திருவில ஞ்சி குமாரர் வருகையும் நடைபெற்றது.

மாலையில் வெள்ளிச் சப்பரத்தில் திருவிலஞ்சி குமாரர் மற்றும் சிம்மாசனத்தில் சுவாமி, அம்மன் வீதியுலா நடை பெற்றது. வரும் 8-ம் தேதி பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, 9-ம் தேதி காலை தேரோட்டம், 11-ம் தேதி காலை 8.30 மணிக்கும், இரவு 7 மணிக்கும் நடராஜருக்கு தாண்டவ தீபாராதனை நடைபெறுகிறது.

வரும் 12-ம் தேதி சித்திரசபையில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், பச்சை சார்த்தி தாண்டவ தீபாராதனை, 14-ம் தேதி சித்திரை விஷு தீர்த்தவாரி நடைபெறுகிறது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் காலை, மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனையும், இலஞ்சி குமாரர், சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலாவும் நடைபெறுகிறது.

பாபநாசம்

SCROLL FOR NEXT