நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி தொற்று பரிசோதனை எண்ணிக்கைககள் அதிகப்படுத்தப் பட்டுள்ளது, என நாமக்கல் மாவட்ட சுகாதாரப் பணிகள் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அலுவலர்கள் கூறியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த வாரம் நாள்தோறும் 900 நபர்கள் சோதனை செய்தோம். தற்போது 1,200 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப் படுகிறது. மேலும், மாவட்டம் முழுவதும் 72 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நாள்தோறும் 2,500-க்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப் படுகிறது. இந்தப் பணியில் 500 ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதும் தற்போது 13 கட்டுப்பாட்டு மண்டலங்கள் உள்ளன. கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.