காட்டுமன்னார்கோவிலில் திமுககூட்டணி விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் சிந்தனைச் செல்வனை ஆதரித்து நேற்று முன் தினம் இரவு குமராட்சியில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி கலந்து கொண்டு பேசியது:
நாம் போட்டியிடும் ஆறு தொகு திகளில் செலவு செய்ய பணம் இல்லை.ஆனால் 10 ஆண்டுகால ஆட்சியில் கோடி, கோடியாக கொள்ளை அடித்துள்ளனர் .அதை வைத்து வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்குகளை வாங்க முற்படுகின்றனர். விடுதலைச்சிறுத்தைகளின் வாக்கு களை வாங்கினால் வெற்றி பெற்று விடுவோம் என்ற எண்ணத்தில் உள்ளனர். அவர்கள் எண்ணத்தை தவிடு பொடியாக்கி அனைவரும் ஒற்றுமையாக வாக்களிக்க வேண் டும்.
இது எம்ஜிஆர்,ஜெயலலிதா அதிமுக கிடையாது. இதுமோடியி டம் அடமானம் வைக்கப்பட்ட அதிமுக. அதிமுகவை பாஜகவுடன் அடமானம் வைத்து உள்ளனர். பாஜக ஆட்சிக்கு வரக் கூடாது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்.
எனவே பாஜக கூட்டணிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். அதிமுகவை தேர்தலில் தோற் கடிக்க வேண்டும் என்று தெரி வித்தார்.