நெய்வேலி தொகுதி அமமுக வேட்பாளர் டாக்டர் பக்தரட்சகன் கூட்டணிக்கட்சி நிர்வாகிகளுடன் நேற்று பணிக்கன்குப்பம் பகுதி யில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட் டிருந்தார்.
அப்போது அப்பகுதி மக்கள் அவரிடம், அவர்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை. இறந்தவர்களை அடக்கம் செய்வதற்காக இடுகாடு செல் லும் வழி பாதை எங்களுக்கு சரியானதாக இல்லை.
அதனை சீரமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
அவர்களிடம் பக்தரட்சகன் பேசியது: நான் சுமார் 25 வருடத்திற்கு மேல் வெளிநாடுகளில் வாழ்ந்தது போதும் என்று தொகுதி மக்க ளுக்காக சேவை செய்ய வந் துள்ளேன்.
நான் ஆளுங்கட்சியில் இல்லை. எதிர்க்கட்சியில் இல்லை. ஒரு ஊருக்கே மின்சாரம் மற்றும் சாலை வசதி அமைத்து தந்துள்ளேன். எனவே வாக்களித்து வெற்றி பெற வைத்தால் உங்கள் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்று தருவேன் என்றார்.