புவனகிரி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் துரை.கி.சரவணன் புவனகிரி ஒன்றிய கிராமங்களில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். 
Regional03

ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி அமையும் : புவனகிரி திமுக வேட்பாளர் சரவணன் உறுதி

செய்திப்பிரிவு

புவனகிரி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக துரை.கி. சரவணன் போட்டியிடுகிறார். அவர் நேற்று புவனகிரி மேற்கு ஒன்றியத்தில் வாக்கு சேகரித்தார். அழிசிக்குடி கிராமத்தில் பிரச்சாரத்தை தொடங் கிய அவர், நாலாந்தெத்து, பெரியமேடு, வண்டுராயன்பட்டு, பு.உடையூர், வத்தராயன்தெத்து, தலைக்குளம், உளுத்தூர், பிரசன்னராமாபு ரம், அம்பாள்புரம் உள்ளிட்ட கிரா மங்களுக்கு சென்று வாக்கு சேகரித்தார். அப்போது திமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், பெண்கள் உள்ளிட்டோர் மாலை அணிவித்தும் ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர். அப்போது வேட்பாளர் சரவணன் பேசியது: 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் தமிழகம் இருண்டு விட்டது. தமிழகம் விடியலைப் பெற திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி அமைய தனக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் தமிழகம் இருண்டு விட்டது.

SCROLL FOR NEXT