Regional01

வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா அதிமுக வேட்பாளர்கள் மீது வழக்கு :

செய்திப்பிரிவு

வில்லிபுத்தூர் அருகே ரைட்டன்பட்டியில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததாக வில்லிபுத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் மான்ராஜ் உட்பட 5 பேர் மீது வில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

சாத்தூர் மேலகாந்தி நகரில் வாக்காளர்களுக்குப் பணம் வழங்கியதாக அதிமுக வேட்பாளர் ரவிச்சந்திரன் உட்பட 2 பேர் மீது நகர் போலீஸாரும், சிவகாசி அருகே மாரனேரியில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததாக அதிமுக பிரமுகர் காசிராஜ் என்பவர் மீது மாரனேரி போலீஸாரும், அருப்புக்கோட்டை அண்ணா நகர் பகுதியில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயன்றதாக அடையாளம் தெரியாத ஒருவர் மீது அருப்புக்கோட்டை நகர் போலீஸாரும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதேபோல் சாத்தூர் தொகுதிக்குட்பட்ட மேலாண் மறைநாடு கிராமத்தில் இன்னாசிராஜ் என்பவரது வீட்டில் வாக்காளருக்குப் பணப் பட்டுவாடா செய்ததாக சாத்தூர் அதிமுக வேட்பாளர் ரவிச்சந்திரன் உட்பட 3 பேர் மீது ஆலங்குளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT