Regional03

அதிமுக பிரமுகரிடம் : ரூ.9 லட்சம் பறிமுதல் :

செய்திப்பிரிவு

சிவகங்கை அருகே நாட்டரசன் கோட்டை தண்ணீர் பந்தல் விலக்கில் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த காரை சோதனையிட்டதில் ரூ. 9,23,500 இருப்பது தெரியவந்தது. விசாரணையில், காரில் சென்றவர் சருகணியைச் சேர்ந்த பிரான்சிஸ். அதிமுக மாவட்ட சிறுபான்மையினர் பிரிவைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்தது. இதையடுத்து பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT