கிருஷ்ணகிரியில் முகக்கவசம் அணியாதவர்களிடம் சுகாதாரத் துறையினர் ரூ.200 அபராதம் வசூலித்தும், முகக்கவசம் வழங் கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கிருஷ்ணகிரி மாவட்டத் தில் கரோனாவால் பாதிக்கப்படு வர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது 229 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் செல்வம், சுகாதார ஆய்வாளர்கள் பாஸ்கர், சீனிவாசன், கலைவேந்தன், இக்பால் பாஷா, வாஷீம்அகமத் மற்றும் எஸ்ஐ மோகன் தலைமையிலான குழுவினர் வாகனத் தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, இருசக்கர வாகனம், 4 சக்கர வாகனங்களில் முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் வசூலித்தனர். மேலும், முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.