தஞ்சாவூர் அருகே புதுக்குடி சோதனைச் சாவடி பகுதியில், செல்வராணி தலைமை யிலான பறக்கும் படையினர், துணை ராணுவக் குழுவினர் நேற்று முன்தினம் இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிந் தனர். அப்போது, திருச்சியிலிருந்து கும்பகோணம் நோக்கி வந்த காரில், கும்பகோணத்தைச் சேர்ந்த பட்டுச் சேலை வியாபாரி சரவணன்(41), உரிய ஆவணங்களின்றி 121 பட்டுச்சேலைகளை எடுத்துச் செல்வது தெரியவந்தது. இதை யடுத்து, அந்த பட்டுச் சேலைகளை அதி காரிகள் பறிமுதல் செய்து, திருவையாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் மஞ்சுளாவிடம் ஒப்ப டைத்தனர். பின்னர், அந்த பட்டுச் சேலை கள் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டன.