Regional01

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் வாக்குச் சாவடிகளுக்கு - வாக்கு இயந்திரங்கள் இன்று அனுப்பி வைப்பு :

செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டத்தில் 1,884 வாக்குச்சாவடிகளிலும், திருநெல்வேலி மாவட்டத்தில் 1924 வாக்குச்சாவடிகளிலும் நாளை தேர்தல் நடைபெறுகிறது.

தென்காசி மாவட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 9,043 பேர் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கு மூன்றுகட்டங்களாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தேர்தல் பணியாற்றும் வாக்குச்சாவடிகள் குறித்த விவரம் கணினி சுழற்சி முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

மூன்றாம்கட்ட பயிற்சி நடைபெற்ற மையங்களில் வாக்குச்சாவடிகளில் பணி நியமனம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கு உத்தரவு இன்று வழங்கப்படுகிறது. அதை பெற்றுக்கொண்டு, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மையங்களுக்குச் செல்கின்றனர்.

சங்கரன்கோவில் தொகுதியில் 365 வாக்குச்சாவடி மையங்களு க்கு 438 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 438 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 475 விவி பாட் இயந்திரங்கள், வாசுதேவநல்லூர் தொகுதியில் 336 வாக்குச்சாவடி மையங்களுக்கு 404 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 404 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 437 விவி பாட் இயந்திரங்கள், கடையநல்லூர் தொகுதியில் 411 வாக்குச்சாவடி மையங்களுக்கு 988 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 494 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 535 விவி பாட் இயந்திரங்கள், தென்காசி தொகுதியில் 408 வாக்குச்சாவடி மையங்களுக்கு 980 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 490 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 531 விவி பாட் இயந்திரங்கள், ஆலங்குளம் தொகுதியில் 364 வாக்குச்சாவடி மையங்களுக்கு 437 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 437 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 474 விவி பாட் இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

திருநெல்வேலி

பலத்த போலீஸ் பாதுகாப்பு

மூன்றாம்கட்ட பயிற்சி நடைபெற்ற மையங்களில் வாக்குச்சாவடிகளில் பணி நியமனம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கு உத்தரவு இன்று வழங்கப்படுகிறது. அதை பெற்றுக்கொண்டு, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மையங்களுக்குச் செல்கின்றனர்.

SCROLL FOR NEXT