Regional01

பறக்கும் படை சென்ற கார் விபத்து 3 போலீஸார் காயம் :

செய்திப்பிரிவு

திருச்செங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி கூடுதல் பறக்கும் படை குழு எண் 1 நேற்று அதிகாலை 3 மணியளவில் காளிப்பட்டி பகுதியில் ஆய்வுக்காக காரில் சென்று கொண்டிருந்தது. அப்போது காரின் முன்பக்க டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர புளியமரத்தில் மோதியது.

இதில் ஒப்பந்த கார் ஓட்டுநர் பூபாலன், காவல் உதவி ஆய்வாளர் மகுடபதி, மத்திய பிரதேச ஆயுதப்படை தலைமைக் காவலர் ராம்பகதூர், காவலர் லெக்ராக் ஆகியோர் காயமடைந்தனர். அனை வரும் உடனடியாக திருச் செங்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பாக மல்லசமுத்திரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT