ராமநாதபுரத்தில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த காங்கிரஸ் கட்சியினர், பொதுமக்களுக்கு முகக் கவசங்களை வழங்கினர்.
ராமநாதபுரம் தொகுதியில் திமுக சார்பில் காதர்பாட்சா முத்துராமலிங்கம் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக காங்கிரஸ் மாவட்டச்செயலாளர் மணி கண்டன் தலைமையில் அக்கட் சியைச் சேர்ந்த 20 பேர், ராமநாதபுரம் நகர் நகைக்கடை பஜாரில் தாம்பூலத் தட்டுடன் மக்களை சந்தித்து துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர். மேலும், கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் முகக் கவசங்களையும் வழங்கினர்.