சிவகங்கை தொகுதி காளையார்கோவிலில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் நடனமாடிய நாட்டுப்புறக் கலைஞர்கள். படம்: எல். பாலச்சந்தர் 
Special

நாட்டுப்புற கலைஞர் மூலம் கூட்டத்துக்கு ஆள் சேர்க்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி :

செய்திப்பிரிவு

சிவகங்கை தொகுதியில் பிரச்சாரக் கூட்டங்களுக்கு ஆட்களைச் சேர்க்க நாட்டுப்புறக் கலைஞர்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பயன்படுத்தி வருகிறது.

அரசியல் கட்சிகள் பிரச்சாரக் கூட்டங்களில் தலைவர்கள் வரும் வரை, ஆட்களைச் சேர்க்க திரைப்பட நடனக் கலைஞர்களைப் பயன்படுத்தி வரு கின்றன. இதனால் பிரச்சாரத்துக்குத் தலைவர்கள் வரும்வரை கூட்டம் கலை யாமல் இருக்கும். ஆனால், சிவகங்கை தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரச்சாரக் கூட்டங்களில் நாட்டுப்புறக் கலைஞர்கள் மூலம் ஆட்களைக் கவர்ந்து வருகிறது. மேலும், அவர்கள் மூலம் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளை விமர்சனம் செய் கின்றனர். காளையார்கோவிலில் இந்திய கம்யூ. வேட்பாளர் குணசேகரனை ஆதரித்து நடந்த கூட்டத்தில் தப்பாட்டம், கரகாட்டம், நாட்டுப்புறப் பாட்டு மூலம் பிரச்சாரம் செய்தனர்.

SCROLL FOR NEXT