தேர்தல் விதிமீறல்களை தடுக்க 9 குழுக்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வருவதாக கிருஷ்ணகிரி மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெயசந்திர பானு ரெட்டி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதி களுக்கு, 9 பறக்கும்படைகுழுக்கள் வீதம், சுழற்சி முறையில் அமைக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமீறல்கள் மற்றும் விதிமுறைகள் மீறி கொண்டு செல்லப்படும் பணம், வாக்காளர்களுக்கு பரிசுப்பொருட்கள் மற்றும் மதுபானங்கள் வழங்குவது கண்காணிக்கப்பட்டு வருகிறது.
நிலையான கண்காணிப்பு குழுக்கள் மூலம் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக அதிகமாக வாகனம் செல்லும் இடங்களிலும், மாவட்ட மற்றும் மாநில எல்லைகளிலும், நிலையான கண் காணிப்பு குழுக்கள் வாகனத்தை பரிசோதனை செய்து வருகின்றனர்.
வீடியோ கண் காணிப்பு குழுக்கள் சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஒரு குழு வீதம் அமைத்து கட்சி பொதுக் கூட்டம் நடக்கும் இடங்கள், வேட்பாளர்கள் ஓட்டு சேகரிக்கும் இடங்களிலும், கண்காணிப்பு செய்து வீடியோவாக பதிவு செய் கின்றனர்.
இந்த 3 குழுக்களையும் ஆட்சியர் அலுவல கத்தில், 24 மணி நேரமும் இயங்கும் மையம் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.