தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் நேற்று 1-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.
வடக்கு அந்தமான் கடல் பகுதியில் திடீரென ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்களில் காற்று பலமாக வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு வரும் கப்பல்கள் மற்றும் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், 1-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு நேற்று ஏற்றப்பட்டது.