Regional01

டிராக்டர் சக்கரத்தில் சிக்கி ஓட்டுநர் உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

புளியங்குடி அருகே உள்ள ரத்தனபுரியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (38). சொந்தமாக டிராக்டர் வைத்துள்ள இவர், அப்பகுதியில் உள்ள ஒருவரது எலுமிச்சை தோட்டத்தில் டிராக்டரில் சுழல் கலப்பை பயன்படுத்தி உழுதுகொண்டு இருந்தார்.

அப்போது, உழவு இயந்திரத் தில் செடிகள் சிக்கியுள்ளன. அதை எடுக்க முயன்றபோது சுழல் கலப்பையில் சிக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

SCROLL FOR NEXT