அனைத்து வர்த்தக மற்றும் வியாபார, தொழில், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலை களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு வாக்குப்பதிவு நாளன்று சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ஜெயசந்திர பானு ரெட்டி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்கும் வகையில் அனைத்து வர்த்தக, வியாபார, தொழில், கல்வி நிறுவனங்கள், தொழிற் சாலைகளில் பணி புரியும் பணியாளர்களுக்கு அன்றைய தினம் முழு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும். வாக்குப்பதிவு நாளன்று பணிக்கு வராத பணியாளர்களின் சம்பளத்தில் இருந்து எவ்வித பிடித்தமும் செய்யக் கூடாது.
மேலும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 135 பி-ன்படி அனைத்து கடைகள், வர்த்தக நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் (தினக்ககூலி, தற்காலிக மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் உட்பட்டோர்) அனைத்து தொழிலாளர் களுக்கும் வருகிற 6-ம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்.
விடுப்பு வழங்கப்படாதது குறித்து புகார்கள் பெறப்படுமேயானால், தொடர் புடைய நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.