ராயக்கோட்டை அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் 2 விவசாயிகள் உயிரி ழந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள அட்டப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (47). இவரது உறவினர் சிந்தகுண்டா கிராமத்தைச் சேர்ந்த முருகன் (50). இருவரும் விவசாயிகள். இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் மாலை இருசக்கர வாகனத்தில் ஓசூர் - ராயக்கோட்டை சாலையில் உள்ள தக்காளி மண்டி பகுதியில் வந்து கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியே வந்த கார், இருசக்கர வாகனத்தின் மீது மோதி யது. இதில் படுகாயம் அடைந்த சுப்பிரமணி, முருகன் ஆகிய 2 பேரையும், அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் முருகன் மேல்சிகிச்சைக்காக சேலம் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனில்லாமல், 2 பேரும் உயிரிழந்தனர். விபத்து குறித்து ராயக்கோட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.