Regional03

ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்கள் ஆயுள் சான்று சமர்ப்பிக்க அறிவுறுத்தல் :

செய்திப்பிரிவு

ஓய்வூதியம் பெறும் கட்டுமானத் தொழிலாளர்கள் ஏப்ரல் 30-ம் தேதிக்குள் ஆயுள் சான்றினை சமர்ப்பிக்க வேண்டுமெனதொழிலாளர் நலத்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஈரோடு தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) சு.காயத்ரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஓய்வூதியம் பெற்று வரும் தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் உடல் உழைப்புத் தொழிலாளர்கள் 2021- 22- ம் ஆண்டுக்கான ஆயுள் சான்றினை ஏப்ரல் 30-ம் தேதிக்குள் அளிக்க வேண்டும். இதனுடன் தற்போதைய ஆயுள் சான்று, செல்போன் எண், நாளது தேதிவரை பதிவு செய்யப்பட்ட விவரங்களுடன் கூடிய வங்கிக்கணக்கு புத்தகத்தின் அசல் மற்றும் நகல் ஆகிய ஆவணங்களை இணைத்து, ஈரோடு சென்னிமலை சாலையில் செயல்படும் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தில் நேரில் அளிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0424 2275591, 2275592 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT