நெய்வேலி அருகே உள்ள பேர்பெரியாங்குப்பம் கிராமத்தில் திமுக வேட்பாளர் சபா ராஜேந்திரன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 
Regional01

நெய்வேலி தொகுதியில் - மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் : பிரச்சாரத்தில் திமுக வேட்பாளர் சபா.ராஜேந்திரன் வாக்குறுதி

செய்திப்பிரிவு

நெய்வேலி தொகுதியில் திமுக வேட்பாளர் சபா ராஜேந்திரன் கூட்டணிக்கட்சியினருடன் கிராமம், கிராமமாக வாக்கு சேகரிப்பில் ஈடுட்டு வருகிறார்.

முத்தாண்டிக்குப்பம், காட்டுக்கூடலூர், முடப்புள்ளி, பேர்பெரியாங்குப்பம், வெங்கடாம்பேட்டை, ஆயிப்பேட்டை, கோரணப்பட்டு உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் திறந்த வேனில் வாக்குகள் கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது திமுக வேட்பாளர் சபா ராஜேந்திரன் பேசியதாவது:

நெய்வேலி உள்ள அனைத்து கிராமங்களிலும் பொது நூலகம் அமைத்து அதன் மூலம் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.

கிராமத்திலும் உள்ள வீடுகள்தோறும் குடிநீர் குழாய் இணைப்பு அமைத்து தருவது உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை தொகுதி மக்களுக்கு செய்து தருவேன். மேலும் இப்பகுதியில் வசிக்கும் அடித்தட்டு ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் முன்னேற பல்வேறு நலத் திட்டங்களை கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன். தமிழகத்தில் கடந்த 10 ஆண்டு காலத்தில் ஊழல் மலிந்து விட்டது.

அதிமுகவிற்கு வாக்களித்தாலும், அது பாஜகவிற்கு அளித்த வாக்காக தான் மாறும். எனவே திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக நல்லாட்சி மலர எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் என்று தெரிவித்தார். திமுக, கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT