புவனகிரி திமுக வேட்பாளர் சரவணன் எம்எல்ஏ மந்தாரக்குப்பம் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் வாக்கு சேகரித்தார். 
Regional03

ஸ்டாலின் முதல்வரானால் - பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் : புவனகிரி திமுக வேட்பாளர் சரவணன் பிரச்சாரம்

செய்திப்பிரிவு

புவனகிரி திமுக வேட்பாளர் சரவணன் எம்எல்ஏ கூட்டணிக்கட்சி நிர்வாகிகளுடன் பள்ளி வாசல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

புவனகிரி தொகுதிக்கு உட்பட்ட கங்கைகொண்டான் பேரூராட்சி, மந்தாரக்குப்பம் பகுதிக ளில் உள்ள பொதுமக்கள், வியாபாரிகளிடம் நேற்று திமுக வேட்பாளர் சரவணன் எம்எல்ஏ வாக்குசேகரித்தார். இதனை தொடர்ந்துஅப்பகுதியில் உள்ள பள்ளிவாச லில் வாக்கு சேகரித்தார். பள்ளிவாசல் ஜமாத் நிர்வாகி மதர்ஷா, கங்கைகொண்டான் நகர செயலா ளர் பக்தவத்சலம், ஒன்றிய திமுகசெயலாளர் ராயர் மற்றும் கூட்ட ணிக் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

வாக்கு சேகரிப்பின் போது சரவணன் எம்எல்ஏ பேசியது:

தமிழகத்தில் 10 ஆண்டுகளாக அதிமுக அரசு எந்த விதமான மக்கள் நலத்திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. கொள்ளையடிக் கும் அரசாக இருந்து வந்தது. திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வரானால்பல மக்கள் நலத்திட்டங்கள் செயல் படுத்தப்படும். திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பெண்களுக்கு பஸ் பாஸ், மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன் ரத்து, கல்விக்கடன் ரத்து, விவசாயக்கடன் ரத்து உள்பட பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் கொண்டு வரப்படும். எனவே தமிழ கத்தில் நல்லாட்சி அமைந்திட திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்க எனக்கு வாக்க ளித்து வெற்றி பெற செய்யுங்கள் என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT