Regional02

ராமநாதபுரத்தில் : ஊருணியில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

ராமநாதபுரம் ஊருணியில் மூழ்கி 12 வயது சிறுவன் உயிரிழந்தார்.

ராமநாதபுரம் கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் வையமுத்து. தனியார் நிறுவன ஊழியர். இவரது மகன் நவீன் (12). தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் தனது நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள ஊருணியில் நேற்று குளிக்கச் சென்றார். ஆழமான பகுதிக்குச் சென்ற நவீனுக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார். அவருடன் சென்ற நண்பர்கள் கூச்சலிட்டதும், அங்கிருந்தோர் சிறுவன் நவீனை மீட்க முயன்றனர். அதற்குள் சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். அதனையடுத்து சிறுவனின் உடலை மீட்டனர். இதுகுறித்து பஜார் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT